விளையாட்டாய் ஒரு மாற்றம்

விடுமுறை நாட்களில்
சேக்காளிகளுடனான
விளையாட்டுக்கிடையில்
வெய்ட்டீஸ் விட்டு....
விடாப்பிடியாக அம்மா
இன்னுமொரு வாயென ஊட்டியதை
கடவாயில் அடக்கி
ஜூட்டீஸ் என
மறுபடியும் தொடங்கி.....
இன்றும் நான் நலமாகவே இதை
டைப்பிக்கொண்டிருக்கிறேன்....
இல்லாள் கண்டிப்பாகக் கொடுத்த
ஊட்டச்சத்து பானத்தை
விழுங்கி முடித்த மகன்
மூச்சிரைக்கக் கொன்று
குவித்துக்கொண்டிருக்கிறான்
தொடுதிரையில்
மூக்குக்கண்ணாடியுடன்.

எழுதியவர் : தர்மராஜ் (4-Sep-15, 7:40 pm)
பார்வை : 115

மேலே