பாட்டியின் அன்பு

பார்வை மங்கி
தலை நரைத்து
தள்ளாடும் வயதிலும்
நீ வாங்கி வரும்
ஐந்து ருபாய் திண்பண்டமும்
மீண்டும் மீண்டும் கேட்டாலும்
சலிக்காது கூறிய ஐநூறு கதைகளும்
பெற்றோரிடம் அடிவாங்கி அழுத பொழுதுகளில்
அணைத்து மடி சாய்த்து
தேற்றி புரியவைத்த தவறுகளும்
பழித்தாலும் பொறுத்து கொண்டு
பரிவால் எனை வென்ற நினைவுகளாலும்
சேர்த்து வைத்த அன்பு தான்
என் வாழ்விற்கு ஒளிவிளக்கு

எழுதியவர் : கவின் மலர் (4-Sep-15, 4:28 pm)
Tanglish : paattiyin anbu
பார்வை : 662

மேலே