kavinmalar - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  kavinmalar
இடம்:  trichy
பிறந்த தேதி :  07-May-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  02-Apr-2014
பார்த்தவர்கள்:  84
புள்ளி:  14

என் படைப்புகள்
kavinmalar செய்திகள்
kavinmalar - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Sep-2015 4:33 pm

கருவறையில் உயிர் கொண்ட நாள் முதல்
பத்துமாதம் உடலில் சுமந்து
பத்திரமாய் பேணிகாத்து
பக்குவமாய் உணவு உட்கொண்டு
தன் உடல் வழியே அமுதுட்டி
எலும்புடைக்கும் வலி பொறுத்து
பத்திரமாய் உலகில் சேர்த்து
தன் மக்களுக்காக வாழ்வை அர்ப்பணிக்கும்
அற்புத ஜீவன் தாய்

மேலும்

kavinmalar - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Sep-2015 4:32 pm

கண்களால் உயிர் தொட்டு
காதலாய் நீ சிந்தும் புன்னகையில்
பல நூறு ஜென்மத்து காயங்களை மறக்கிறேன்
உன் பார்வை வீச்சில் மயங்கி பேச்சிழந்து
நீ பேசும் வார்த்தைகளை
மௌனமாய் சேமிக்கிறேன்
என்னை இழுத்து தோள் சேர்க்கும்
உன் கரங்களில்
குழந்தையாய் மகிழ்ந்து போகிறேன்
காதலாய் மடி சாய்க்கும் பொழுதில்
கைதியாய் மகிழ்வோடு
புதைந்து போகிறேன் உன்னோடு
அக்கறையாய் நீ கோபிக்கும் நொடிகளில்கூட
சர்க்கரையாய் மனம் இனிக்க
பாகாய் கரைகிறேன் உனக்குள்
உன்னை காணும் பொழுதெல்லாம்
மந்திரகோலாய் என்னை
ஆட்டுவிக்கிறாய் என் மாயவனே

மேலும்

kavinmalar - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Sep-2015 4:30 pm

அதிகாலையில் நீ
சூரியனானால் நான் தாமரையாகிறேன்
என் முகம் பார்த்து
நீ சிந்தும் புன்னைகைக்காக
நாள் முழுவதும் தவம் செய்கிறேன்
நீ புன்னைகைத்த நொடியில்
புது ஜனனம் பெறுகிறேன்
உச்சி பொழுதில்
உன் கோபமான கதிர்களால்
நான் வாடி போகிறேன்
அந்தி பொழுதில்
குளிர் நிலவாய் வீசினால்
அல்லி பூவாக மலர்கிறேன்
உன் காலடி தொடர்ந்து வந்த நாள் முதல்
கண்ணாடியாக உன்னை
பிரதிபலித்து கொண்டே இருக்கிறேன்

மேலும்

வளமான வரிகள் காதல் அழகு 04-Sep-2015 5:04 pm
kavinmalar - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Sep-2015 4:28 pm

பார்வை மங்கி
தலை நரைத்து
தள்ளாடும் வயதிலும்
நீ வாங்கி வரும்
ஐந்து ருபாய் திண்பண்டமும்
மீண்டும் மீண்டும் கேட்டாலும்
சலிக்காது கூறிய ஐநூறு கதைகளும்
பெற்றோரிடம் அடிவாங்கி அழுத பொழுதுகளில்
அணைத்து மடி சாய்த்து
தேற்றி புரியவைத்த தவறுகளும்
பழித்தாலும் பொறுத்து கொண்டு
பரிவால் எனை வென்ற நினைவுகளாலும்
சேர்த்து வைத்த அன்பு தான்
என் வாழ்விற்கு ஒளிவிளக்கு

மேலும்

அன்பின் நினைவுகள் எப்போதும் நெஞ்சை விட்டு நீங்காது 04-Sep-2015 5:04 pm
kavinmalar - கார்த்தி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
24-Aug-2015 1:25 am

கல்லூரியில் பயிலும் போது வரைந்து பழகிய ஓவியங்கள் - 2

மேலும்

தங்கள் ஆதரவுக்கு நன்றி சார் ! 26-Aug-2015 4:01 pm
மிக்க நன்றி சார் ! 26-Aug-2015 4:01 pm
நன்றி மேடம் ! 26-Aug-2015 4:00 pm
அருமை... வாழ்த்துக்கள்..!! 24-Aug-2015 9:48 pm
kavinmalar - கார்த்தி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
24-Aug-2015 1:20 am

கல்லூரியில் பயிலும் போது வரைந்து பழகிய ஓவியங்கள் - 1

மேலும்

சிறப்பு, வாழ்த்துக்கள் நண்பரே 16-Nov-2016 4:21 pm
ஓவியக் கலை பற்றி பல நூல்கள் மூலம் ஓவியா ஆசிரியர் மூலம் கற்று பயன் பெறவும் ஆயகலைகள் 64 கற்க நமக்கு வாய்ப்பு இல்லையே என ஏக்கம் பாராட்டுக்கள் 23-Jul-2016 7:24 pm
அருமை ஆண்டவன் கொடுத்திட்ட கொடை வரைதல் கலை வாழ்த்துக்கள் கார்த்திகேயன் 24-Aug-2015 11:49 pm
மிக அருமை.. 24-Aug-2015 9:48 pm
kavinmalar - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Feb-2015 2:53 am

கழுத்தறுத்து தோலுரித்து கச்சிதமாய் வெட்டி
கொழுப்பகற்றிக் கூறிட்டப் பின்னால் - கழுவி
அடுப்பேற்றி உண்கின்ற ஆசைக்கு ஆடு
கொடுக்கும் அறியா கழுத்து.

நேர்த்தி எனும்பேரில் நீவளர்த்த ஆடொன்று
கீர்த்தி அடையு மெனும்போர்வை -போர்த்தி
கழுத்தறுக்கும் காதகத்தை செய்யக் கடவுள்
அழுவான் தெரியா துனக்கு

பலியாலே துன்பம் சரியாகு மென்றால்
பலியாகு நீயே! முடிந்தால் - புலியொன்றைக்
காட்டில் துரத்திப் பலிகொடு . ஏமாந்த
ஆட்டை அறுத்தல் தவிர் .

மாமிச முண்ணும் மறைமுக ஆசைக்கு
சாமியை காரணம் சொல்லியே -பூமியில்
வாயில்லா ஜீவன் வளர்த்து வெட்டுகின்ற
ஆயுதத்தை இன்றே அழி.

எந்தக் கடவுள் எனக்கு இதுவே

மேலும்

அழுத்தமான பதிவு நன்று 25-Apr-2015 11:43 am
நன்றிகள் புனிதா 06-Mar-2015 3:34 am
நன்றிகள் 06-Mar-2015 3:34 am
எந்தக் கடவுள் எனக்கு இதுவேண்டும் தந்திடு என்றே உனைக்கேட்டான்? உண்மைதான் சிறப்பான படைப்பு அய்யா..! 27-Feb-2015 4:42 pm
kavinmalar - Arulmathi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-May-2014 1:16 pm

உப்பளங்களில் கொப்புளிக்கும் உயிர் !

உன் உணவை ருசியாக்க
உப்பளத்தில் உடல் கொப்பளித்த
உழைப்பாளிகள் எத்தனையோ !

தோல் கழிவை சுத்தம் செய்ய
உயிர் தந்த தோழர்கள் எத்தனையோ !

மனிதக் கழிவை சுத்தம் செய்து
மண்ணுக்குள் போன மகாத்மாக்கள் எத்தனையோ !

விஷ வாயு தாக்கி விண்ணுலகம் சென்ற
வீரத் தோழர்கள் எத்தனையோ !

போராடக் கற்றுக்கொடுத்த
தொண்டர்கள்
பதவி ஏற்க மறுத்து
பாசக்கயிற்றை பற்றியதென்ன !

உடலுக்குள் ஓடும் உதிரத்தை
உழைப்பு உறிஞ்சிப் பிழிய
வழியும் உப்புநீரில் (வியர்வை )
உடல் வளர்த்த பிண்டங்கள் !

சுரண்டலுக்குத் தாரைவார்த்த
சுகங்கள் எத்தனையோ ?!

மகிழ்வுந்தில் மணிக்கணக்காய்

மேலும்

நல்ல கவிதை வாழ்த்துக்கள் 27-Mar-2015 4:45 pm
தவறாய் இருந்தால் மன்னிக்கவும் முதலாளிகள் ஒரு புறம் இருக்கட்டும் முதலில் நாம் நமக்காக உழைக்கும் உழைப்பாளிகளை சக மனிதனாய் மதிப்பு கொடுத்து பழகுவோம் பின் அனைவரும் ஒன்று பட்டால் முதலாளிகளையும் உழைக்கும் மக்களை மதிக்க வைப்போம் மீண்டும் ஒரு முறை தவறாய் இருந்தால் மன்னிக்கவும் 08-May-2014 9:33 am
உழைப்பாளிகளின் சிரமத்தை செம்மையாக சொல்லப்பட்ட கவிதைக்கு வாழ்த்துகள் 02-May-2014 11:48 pm
நன்று தோழமை 02-May-2014 7:40 pm
ம. ரமேஷ் அளித்த படைப்பில் (public) சர்நா மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
08-May-2014 7:17 am

எதிர் வீட்டாரோடு சண்டை
பேசாமல் ரசித்துக்கொண்டேன்
முற்றத்தில் சருகுகள்

நல்ல உறக்கம்
எப்படிப் பாரம் தாங்கும்?
கனமான பாறை

பற்றிக் கொண்ட பின்னர்
போனது மகிழ்ச்சி
காற்றில் அசைந்த கொடிக்கு

மழையில்லை
விரிகிறது குடை
கோடை வெயில்

தேயாமலேயே இருக்கிறது
கதை சொல்லத் தெரியா பாட்டியிடம்
நிலவின் மறுபக்கம்

மேலும்

கருத்துரைகளுக்கு மகிழ்ச்சியும் நன்றியும் 08-May-2014 7:52 pm
அருமை 08-May-2014 2:54 pm
நல்ல சொற்கள் பிரயோகம் இயல்பாய் இனிமையாய் இருக்கிறது 08-May-2014 9:17 am
நன்று நன்று .......... 08-May-2014 8:42 am
kavinmalar - ம. ரமேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-May-2014 7:17 am

எதிர் வீட்டாரோடு சண்டை
பேசாமல் ரசித்துக்கொண்டேன்
முற்றத்தில் சருகுகள்

நல்ல உறக்கம்
எப்படிப் பாரம் தாங்கும்?
கனமான பாறை

பற்றிக் கொண்ட பின்னர்
போனது மகிழ்ச்சி
காற்றில் அசைந்த கொடிக்கு

மழையில்லை
விரிகிறது குடை
கோடை வெயில்

தேயாமலேயே இருக்கிறது
கதை சொல்லத் தெரியா பாட்டியிடம்
நிலவின் மறுபக்கம்

மேலும்

கருத்துரைகளுக்கு மகிழ்ச்சியும் நன்றியும் 08-May-2014 7:52 pm
அருமை 08-May-2014 2:54 pm
நல்ல சொற்கள் பிரயோகம் இயல்பாய் இனிமையாய் இருக்கிறது 08-May-2014 9:17 am
நன்று நன்று .......... 08-May-2014 8:42 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (13)

user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
karthin

karthin

Trichy

இவர் பின்தொடர்பவர்கள் (13)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
karthin

karthin

Trichy

இவரை பின்தொடர்பவர்கள் (13)

மேலே