என் இனிய மந்திரக்கோலே

கண்களால் உயிர் தொட்டு
காதலாய் நீ சிந்தும் புன்னகையில்
பல நூறு ஜென்மத்து காயங்களை மறக்கிறேன்
உன் பார்வை வீச்சில் மயங்கி பேச்சிழந்து
நீ பேசும் வார்த்தைகளை
மௌனமாய் சேமிக்கிறேன்
என்னை இழுத்து தோள் சேர்க்கும்
உன் கரங்களில்
குழந்தையாய் மகிழ்ந்து போகிறேன்
காதலாய் மடி சாய்க்கும் பொழுதில்
கைதியாய் மகிழ்வோடு
புதைந்து போகிறேன் உன்னோடு
அக்கறையாய் நீ கோபிக்கும் நொடிகளில்கூட
சர்க்கரையாய் மனம் இனிக்க
பாகாய் கரைகிறேன் உனக்குள்
உன்னை காணும் பொழுதெல்லாம்
மந்திரகோலாய் என்னை
ஆட்டுவிக்கிறாய் என் மாயவனே

எழுதியவர் : கவின் மலர் (4-Sep-15, 4:32 pm)
சேர்த்தது : kavinmalar
பார்வை : 72

மேலே