இடம் கொடுக்கவில்லை
நனைந்த மெல்லிய பேப்பர் ஒன்று
இரவு பெய்த மழைநீரில்
மூழ்கியிருக்கவில்லை
நம் நிர்வாணம்
நேற்றைய இரவிற்கு
வெட்கம் பூசிய
அந்த நிகழ்வின்போது
என் குரல் மேட்டில் நழுவி
தொண்டைக்குழியில்
கூடு கட்டியிருந்தது
உறங்கி எழுந்த விடியலில்
உறைந்த உன் எச்சிலின் நுரை
அங்கே செல்லவேண்டுமாய்
உதடுகளில்
இலேசான சிறகுகள்
துளிர்விட்டப்போதே
கனவு இடம் கொடுக்கவில்லை ம்ம்ம்ம்
அனுசரன்