நாம் எங்கே தான் போய் கொண்டிருக்கிறோம் - 1

வாழ்க்கை என்பது
தன்னை புரிந்து கொள்ள
கடவுள் மனிதனுக்கு நடத்தும் ஒரு யாகம்.
தன்னை அறிந்து கொள்ளுவது
சீக்கிரமே ஆனால், அது தான் யோகம்.
தட்டு தடுமாறி சிக்கி தவித்தால், அது பாவம்.
பார்வையினால் ஜெயித்தால்
பந்தம்+பாசம் இணையும், பணியும், படியும்;
பார்வையில் அலட்சியம் கர்வம் கோபம்
சிடு சிடுத்தால் கடுகடுத்தால்
அருகில் வரும் அலைகூட ஆக்ரோசமாய்த்தான் தெரியும்.
கடவுளின் பாடத்திட்டமே,
கருணை உரு, கண்ணிய தோற்றம்,
எளிய உடை, ஏற்றுக்கொள்ளும் நடை.
எங்கே தவறு செய்கிறோம் ?
நம்மை பார்த்து பழகும் குழந்தைகளை பாருங்கள்.
கண்ணாடி முகத்தில் கோளாறுகள் தெரியும்..
நம் உடல் பாவம் மனோ பாவம்
அடுத்த தலைமுறைக்கு
"எங்க அப்பா அப்படி இருப்பார்"
என்று பதிவு செய்து பாடம் கற்பிக்கிறது,
காணுங்கள்..
களையுங்கள்.
மலர் முகங்கள் போட்டது போதும்
கழட்டி தூர எறியுங்கள்
வேண்டாம் அந்த வெட்கங்கெட்ட முகமூடி..
ஆயிரம் பகவத்கீதைகளை திருக்குறளை
படித்து பழக்கிய கண் கெட்டால்
யாருக்கு நஷ்டம்?
கண்ணாடி கண்டு பிடிக்காத காலம் உண்டு
அப்போது நம் முகத்தை நாம் காண வழியில்லை.
மற்றவர்களைப்பார்த்து பழகுகையில்
மனிதம் தன்னிலையினை அனுமானித்துக்கொண்டது.
ஆனால் இன்று
தன்னை கண்டு தானே தயார் செய்யும் மனிதனுக்கு
குறை தெரிவதில்லை,
நிவர்த்தி செய்து கொள்ளவும் மனமில்லை..
மாறாக ஏமாற்ற கற்றுக்கொண்டிருக்கிறான்.
ஏகப்பட்ட வேடமேற்று ஏமாற்றி இறுமாப்பு கொள்கிறான்
அதுவும் நிலையில்லா உலகில் நிலை குலைந்து போகிறான்..
இப்படியே வாழ்ந்திருந்தால்
நாம் எங்கே தான் போய் கொண்டிருக்கிறோம்?
.