சுகமாக அழவேண்டும்

வாழத்துடிக்கும் விருப்பம்,
ஆசைகள் தீண்டிடும் தர்க்கம்.
கோலங்கள் கலைக்கும் காலங்கள்.
இளமைக்குள் மட்டும் ஏனிந்த கனவுகள் கற்பனைகள்.

எட்டாக்கனிகள் எங்கும் ஏற்படுத்தி
ஆட்டுவிக்கும் மனதை அலைக்கழிக்கும்
கீர்த்தியினை செய்தவன்

கீதையையும் தந்துவிட்டு
கீழும் மேலும் கோடுகளிட்டு
காட்டும் விந்தையானது வாழ்வு,

என்ன நினைந்து எம்மை படைத்தாய்
ஏகலைவனே

இனிக்கும் துடிப்புகள்
ஏமாறும் கனவுகள்
எத்தனையோ நினைவுகள்
அனைத்திலும் உன் மாய அற்புதங்கள்.

இப்படி வாழத்தான்
எம்மை படைத்தனையோ,
யாவரையும் பழக்கினையோ?

எல்லோருக்கும் ஏமாற்றம் தான் வாழ்வு
எனில் எதற்கு இந்த விளையாட்டு.

கலியுகத்தில் காலவேதங்களை
கண்கட்டு வித்தைகளை
சாம தாம பேதங்களை
நிறுத்தி நீ ஆடும் ஆட்டத்தில்

பகடைகளாய் நாங்கள்,

பகற்கனவுகளை சுமந்து
பலப்பல கற்பனைகளில் பயனிக்கிறோம்

பார்த்திபா,
போதுமோ ஒரு பகவத் கீதை..

எழுதியவர் : செல்வமணி (5-Sep-15, 9:16 am)
பார்வை : 97

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே