ஆசிரியர் தினம்
![](https://eluthu.com/images/loading.gif)
சுடரும் தமிழ்விளக்கின் தூண்டலாய் விளங்கி, ஆதுரமாய், தன்னலங்கருதாமல் எனக்கன்பு செய்த எனது ஆசிரியை திருமிகு. புவனேஸ்வரி அவர்களின் பாதங்களுக்கு ஆசிரியர் தினத்தில், பாவினாலும், பாடுகின்ற நெஞ்சத்தாலும் பணிவுடன் வணங்குகிறேன்..!!
******
செந்தழல் வாட்டுஞ் சிறுவித்தை யன்பொடுச்
செந்தமிழ் மண்ணிலே சேர்ப்பித்து - சிந்தையில்
சந்தனம் பூசிச் சலிப்பின்றி நீர்தனை
சிந்தனைத் தேங்கனிச் சீருட னீந்திடத்
தந்தணைத் தாளருந் தாய்.
*******
அன்புடன்,
சுந்தர் புருஷோத்தமன்