இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்

முதல் வகுப்பெடுத்த
அருணாச்சாரி டீச்சர்,
பள்ளி இறுதியாண்டு
வகுப்பாசிரியை ஜேனட் என

இன்னும் பல பெயர்களைத்
தாங்கி நிற்கும் எங்களைத்
தாங்கிய தூண்களே....

அன்பும் கண்டிப்பும் சேர்ந்த உங்களின்
அணுகுமுறையினால் இன்று
அனைவரும் இருக்கின்றோம்
அவரவர்க்கேற்ற சிறந்த இடங்களில்

எங்கள் வாழ்வின் வேராய் இருக்கும்
எங்கள் ஆசிரியப் பெருமக்களே
உங்கள் விழுதுகள் நாங்கள் இன்று
உங்களை விழுந்து வணங்குகின்றோம்...!!!

“” என் பள்ளிக் கல்வி ஆசிரியர்களுக்குச் சமர்ப்பணம் “”

~ தப்தி செல்வராஜ், சாத்தூர்

எழுதியவர் : தப்தி செல்வராஜ், சாத்தூர் (5-Sep-15, 9:18 am)
பார்வை : 974

மேலே