யாரேனும் பார்த்ததுண்டா கேட்டதுண்டா

முள் தைத்த
செருப்பின்
அழுகுரல்!
மழையில்
நனைந்த
குடையின்
தும்மல்!
பூப்பறித்த
செடியில்
வழிந்த
ரத்தம்!
கொளுத்திய
கற்பூரத்தின்
ஓலம்!
ஒளிதந்து
இருண்ட
மெழுகுவர்த்தி
கதறல்!
யாரேனும்
கேட்டதுண்டா?





-80 களில் எழுதியது
(சம்பத் இளங்கோவன்)

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (5-Sep-15, 10:41 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 63

மேலே