வானில் ஓர் நேர்க்காணல்

ஓ மேகங்களே....

சுற்றி சுற்றி அழைந்து

நவகிரகங்களை வழிப்படுகிறீர்களா என்ன?

நிலவு என்னும் பெரும் தீபத்தில்

ஏற்றப்பட்ட அகல் விளக்குகளா நட்சத்திரங்கள்.....!!!

மேகங்களே...

ஏன் அழுகிறீர்கள் ?

உங்களின் வேண்டுதல்

நிறைவேறவில்லையா ?



அது சரி...பெருந் தீபத்திற்கு

தீ எங்கிருந்து வந்தது ?

மின்னல் குச்சி வானத்தில் உரசியதால்

ஏற்பட்ட ஜுவாலையோ...!!!

மின்னலே....

நீ எப்போது ஓவியனானாய்..!!!

மேகத்தின் மீது

நீ வரைந்த ஓவியங்கள்

தடுமாறி கீழே விழுந்தனவோ..!!!

பூமியெங்கும்

பச்சைப் பசேலென

நீ வரைந்த ஓவியங்கள்...!!!



வானமே....

எப்படி, உன்னால் உப்பில்லாமல்

நீரை இறைத்துக் கொள்ள முடிகிறது..?

அது சரி...

நீரை இறைக்கும் பொழுது

மீன்களையுமா சேர்த்தா

கொண்டு போனாய் ?

விண்மீன்களைத்தான் சொல்கிறேன் !!!

மீன்களே... நீங்கள் அங்கேயே இருங்கள்,

எங்கள் மீனவர்களை அங்கே அனுப்புகிறேன்.

மீன் பிடிக்க இங்கே

ஏகப்பட்ட கெடுபிடி.

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (5-Sep-15, 5:20 pm)
பார்வை : 94

மேலே