செங்கரும்பு வெளஞ்ச பூமி
செங்கரும்பு வெளஞ்ச பூமி செவப்பு வண்ண ப்ளாட் ஆச்சு...!
வாழைமரம் செழிச்ச பூமி வெறுங்காடா ஆயிடுச்சு...!
தோட்டம் தொரவெல்லாம் மாயமா மறையுதுங்க..
ஆகமொத்தம் விவசாயம் கண்முன்னே அழியுதுங்க..!
நெல் நாற்று பயிரெல்லாம் கொழந்தைங்க தாங்க....
ஆடு மாடு வண்டி காளை சொந்தங்கந்தாங்க.
சூரியனும் வான் மழையும் தெய்வங்க தாங்க...
எங்க குடும்பமுன்னு சொல்வதுக்கு வேற இல்லீங்க.
மத்தவங்க பொழப்பு எல்லாம் உசரம் போகுது...
எங்க விவசாயி பொழப்பு மட்டும் கீழே போகுது.
அட. இதப்புரிஞ்சுகிட்டே கிணற்று நீரும் கீழே போகுது...
இப்போ பம்பு செட்டு மோட்டரெல்லாம் எடைக்குப்போகுது...
மாட்டுச்சாணம், வேம்பு எருக்கை இயற்கை உரத்திலே
நாலுபோகம் அஞ்சு போகம் அப்போ வெளஞ்சிது..
இப்போ புரியாத பேர் சொல்லும் செயற்கை உரத்திலே
அத்தனையும் ஆபத்துனு பேசிக்கிறாங்க..
அப்போ மாடு மேயும் நெலங்களெல்லா விளை நெலமாச்சு...
இப்போ விளை நெலமா இருந்த நெலம் விலைநெலமாச்சு..!
விலை நிலமா ஆனதுமே வீடு மொளச்சுது..
இப்ப கண்ண மூடி முழிக்குமுன்னே காலனியாச்சு