நீர் வீழ்ச்சி

தண்ணீர்த் திவலைகளின்

தற்கொலை விழாவோ..!!!

எழும்பும் புகை

இவைகளின் ஆவிகளோ...!!!

பிடித்த ஆவிகளாலா

மரங்கள் பேயாட்டம் போடுகின்றன

உயிரிழந்த நீர்த்திவலைகளை

சுமந்து செல்லும் ஆறு.

இழவு முடிந்தது

குளிக்கலாம் என்றால்

இதற்கு உள்ளேயே

மூழ்க வேண்டியிருக்கிறது.

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (5-Sep-15, 2:19 pm)
பார்வை : 85

மேலே