தோழி
இருவிழி தேவதை அவள்..!
இதயத்தின் தூரிகை அவள்..!
என் எண்ணங்களின்
நிழலோளி அவள்..!
எண்ணில்லா ஏற்றத்தின்
விதைகளும் அவள்..!
மனதை படிக்கும்
மாயன் அவள்..!
கவலை துடைக்கும்
சேயும் அவள்..!
என்னவளோடு இணைந்துவிட்டால்
என் எதிர் சேரும்
இனிய வில்லியும் அவள்..!
என்னைவிட என்னவள் விரும்பும்
உலகில் உள்ள ஒருத்தியும் அவள்..
மெய்யன்பில் எதிர்திசையாக
மெய் உருவில் நேர்திசையாக
எம் நட்பின் காந்தம் அவள்..!!!
சில வேளையில்
ஈடில்லா தாயும் அவள்..!!