களவு முத்தங்கள்
காத்திருத்தலின் கவலைகள் தொலைந்தன,
உன் கண்மீன்களைக் கண்ட பொழுதுகள்,
உன் ஒற்றை விரல் கோர்த்து
அக்னி வலம் செல்ல ஏங்கிக் கிடக்கிறதென் கால்கள்,
உன் உதட்டோர நாணலில் உறைந்து போன நீராய்
உணர்வற்று நகர்ந்த என் நாட்கள்,
நீ முறைத்துப் பார்க்கும் அழகை
முப்பொழுதும் காண முனைகிறதென் களவு முத்தங்கள்...!