கஜல் 17

நம் இணைவு மெய்ச்சொல் போன்றது
என் நினைவு மேன்மை ஆனது

காதலுக்கு நற்காலம் இது
உன் அணைப்பு இன்மையானது

காதலிக்க வேண்டும் மெய்ப்பட
காதலல்ல வண்மையானது

வாழ, ஓடிவா, ஊக்கம் தர
காதலென்ற தன்மையானது

பேண வேண்டுமன்பை வளமுற
தூய அன்பு தொன்மையானது

கேள், அழைக்க என் நெஞ்சம் அது
என்றுமே முதன்மையானது

நல் புனைவு போல் வாழ்வோம் இனி
எனது பேச்சு உண்மையானது

எழுதியவர் : ரோச்சிஷ்மான் (7-Sep-15, 4:16 pm)
பார்வை : 67

மேலே