திரி நான் தீபம் நீ

என் முனையிலிருந்து
துவங்கியது..
உனது பயணம்.!
என் உச்சி முகர்ந்தாய்.!
நான் உருகி வழிந்தேன்.!
ஒரே..
இலக்கானாலும்
நீ மேல் நோக்கி எழும்பினாய்..!
நான் கீழ் நோக்கி சரிந்தேன்..!
என் நரம்பில்..
அரங்கேறும் உன் நலினம்.!
நீ..
அசைந்து அசைந்து..
எனை உண்டாய்.!
நான்
இசைந்து இசைந்து..
எனை இழந்தேன்.!
எனை
தரைமட்டமாக்கி
வழிந்தோட செய்திருந்தாய்.!
உனை
அனையும் முன்
அதிகம் ஒளிரச்செய்திருந்தேன்.!
ஒரே
புள்ளியில்
உறவைமுடித்து
மிதந்து போனோம்
காற்றில்.!