மாமனிதர் அப்துல் கலாம் கவிஞர் இரா இரவி
மாமனிதர் அப்துல் கலாம் ! கவிஞர் இரா .இரவி !
மூன்றிலும் முரண்பாடு இல்லை
பேச்சு எழுத்து செயல்
கலாம் !
வள்ளுவம் வழி வாழ்ந்தவர்
வள்ளுவத்தைப் பரப்பியவர்
கலாம் !
பேராசையில்லாத
பெரிய மனிதர்
கலாம் !
திருமணம் விரும்பாத
திரு மனம் பெற்றவர்
கலாம் !
பந்தா அறியாத
பாசக்காரர்
கலாம் !
அண்ணனை மதிக்கும்
அன்புக்குச் சொந்தக்காரர்
கலாம் !
தோல்விக்குத் துவளாத
துணிந்த நெஞ்சம்
கலாம் !
மாணவர்களை நேசித்த
மாபெரும் பேராசிரியர்
கலாம் !
அகிலம் பறந்தவர்
அக்கினிச் சிறகுகளால்
கலாம் !
குடியரசுத் தலைவர் பதவியில்
குவளையம் போற்றிட வகித்தவர்
கலாம் !
அயல்நாட்டுக்கு அடிமையாகாமல்
நம் நாட்டிலேயே சாதித்தவர்
கலாம் !
உலக அரங்கில்
உயர்ந்து நின்றவர்
கலாம் !
கர்வம் தெரியாதவர்
ஆணவம் அறியாதவர்
கலாம் !
மனிதநேயத்தின்
மறு உருவம்
கலாம் !
விஞ்ஞானத்தின் விந்தை
மெய்ஞ்ஞானத்தின் தந்தை
கலாம் !
அறிவை விரிவு செய்து
அண்டம் ஆராய்ந்தவர்
கலாம் !
இராணுவ வானூர்தியில் பயணித்த
முதல் குடியரசுத் தலைவர்
கலாம் !
இறுதி மூச்சு உள்ளவரை
இயங்கிக் கொண்டே இருந்தவர்
கலாம் !
குடியரசுத்தலைவர் பணியை விட
பேராசிரியர் பணியை விரும்பியவர்
கலாம் !
மாணவர்களை விரும்பியவர்
மாணவர்கள் விரும்பியவர்
கலாம் !
எல்லோரையும் மதித்தவர்
எல்லோரும் மதித்தவர்
கலாம் !
பாசம் உள்ளவர்
பகை இல்லாதவர்
கலாம் !
சினம் கொள்ளாதவர்
சிந்திக்காமல் பேசாதவர்
கலாம் !
முகம் மலர்ந்தவர்
முகம் சுழிக்காதவர்
கலாம் !
நூல்களை வாசிப்பு மட்டுமன்றி
எழுதியும் சாதித்தவர்
கலாம் !
எதிலும் நாட்டம் கொள்ளாதவர்
இந்த நாடே சோகப்பட்டது அவருக்கு
கலாம் !
அறியாமை இருள் நீக்கிவர்
அறிவொளி தந்தவர்
கலாம் !
அன்பின் சின்னமானவர்
அறிவின் சிகரமானவர்
கலாம் !
உச்சம் தொட்டவர்
ஓய்வின்றி உழைத்து
கலாம் !
பிறந்த ஊருக்கு
புகழ் பல சேர்த்தவர்
கலாம் !
இவர் போல யாரு
என்று பேச வைத்தவர்
கலாம் !
அசைவம் விடுத்து
சைவம் மாறியவர்
கலாம் !
முன் ஏராக நடந்தவர்
முன் மாதிரியாக வாழ்ந்தவர்
கலாம் !
படகோட்டி மகனாகப் பிறந்து
பார் போற்றும் மகனானவர்
கலாம் !