நடைமுறை அற்புதம்
நடைமுறை அற்புதம்
******
ஒருமுறை புத்த சந்நியாசி ஒருவர் பேங்கீய் துறவியைப் பார்க்க வந்தார். அந்த புத்த சந்நியாசிக்கு தான் தினமும் புத்தரின் நாமாவை நாள்தோறும் ஓதுவதாக கர்வம் வந்தது. ஜென்னைப் பார்த்ததும் சந்நியாசி "ஐயா! புத்தர் ஒருமுறை ஒரு கையில் தூரிகையை வைத்துக் கொண்டு ஆற்றின் மறுகரையிலிருக்கும் ஒரு காகிதத்தில் ஒரு பெயரை எழுதினாரே அது போல் உங்களால் ஏதேனும் அற்புதம் நிகழ்த்த இயலுமா?" என்றார். அதற்கு ஜென் துறவி கூறினார், "எனக்குத் தெரிந்த அற்புதமெல்லாம் பசிக்கும் போது புசிப்பதும், தாகமெடுக்கும் போது நீர் அருந்துவதும் தான்!".
ஜென் கதை