உலகத்தில் சிறந்தது எது

எனது விழிகளில்
மலர்களை எழுப்புவதாகத்
தெரிகின்ற..
புத்துணர்வு தருகின்ற
இளங்காலை சூரியன் ..

சுட்டெரிப்பவனாய்..
இருக்கின்றான்..
இதே நேரம்..
இந்த பூமியின்
இன்னொரு இடத்தில்
இருப்பவர்க்கு..

இன்னொரு இடத்தில்
இருப்பவர்க்கோ ..
இல்லாது போகின்றான்..
இரவு என்று ஆகிறது அங்கு!

இருப்பது ஒன்று..
நின்று பார்க்கும்
இடங்களும்..
மனிதர்களும் தான்
வேறு வேறு..

அவரவர்க்கு
அவர் பார்ப்பதே உண்மை
என்று தோன்றுவதில்
என்ன தவறு..?

உண்மையை அறிந்தவர்க்கு..
இருக்க முடியாது ..
எப்போதும்..
முரண்பாடு..
அப்படியும் இருந்துவிட்டால்..
அதையும்
அரவணைப்போம் அன்போடு!
..
மனிதராய் ..
மனிதம்..பழகுதற்கு
இணை..
இவ்வுலகில்
எதுவுமே கிடையாது!

எழுதியவர் : கருணா (8-Sep-15, 11:52 am)
பார்வை : 249

மேலே