ஞாபகமிருக்கா ஞாபகமிருக்கா
ஞாபகமிருக்கா !!ஞாபகமிருக்கா!!
காலண்டர் அட்டையில் பரீட்சை எழுதியதும்
மயில் இறகை நோட்டு புத்தகத்தில் குட்டி போட பத்திரப் படுத்தியதும்
மஞ்சள் பூசிய முகப் பெண் களும்
ஒனிடாவில் ஒலியும் ஒளியும் பார்த்ததும்
வெட்டி போட்ட நுங்கில் வண்டியோட்டியதும்
தந்தி செய்தியில் மரண செய்தி கேட்டதும்
கல்யாண மண்டபங்களில் உறவு உண்ட சோறு கையால் உருட்டி வாங்கியதும்
மஞ்சள் தடவி காதலிக்கு காதல் கடிதம் எழுதியதும்
கதவு வைத்த டிவி பெட்டிய பார்த்ததும்
குரங்கு பெடல் போட்டு சைக்கிள் ஓட்டியதும்
போஸ்ட் கார்டில் ரிசல்ட் வந்ததும்
ஜவ்வு மிட்டாயில் வாச் கட்டியதும்
கிட்டிப்புலி,பம்பரம்,கோலி,கண்ணாமூச்சி, நொண்டியாட்டம்விளயாடியதும்
மண் குழப்பி வீடு கட்டி செப்பு சாமான் செய்து சமைத்ததும்
5,10,20,25 பைசா,..1,2ரூபாய் பார்த்ததும்
10,12வது ரிசல்ட் பேப்பர்ல பார்த்ததும்
அடுத்த வகுப்பு போனதும் பழைய புத்தகத்தை வாங்கியதும்
பழைய புத்தகம் விற்ற காசில் கோனார் தமிழ் உரை வாங்கியதும்
நண்பர்களுக்கு கடிதம் எழுதியதும்
இத்தனையும் பார்த்தது பழகியதும்
கடைசி தலை முறையும் நாமதான்
இவையெல்லாம் படித்து ரசித்து சிறு துளி கண்ணீர் விட்டதும் நாமதான்
ஞாபகமிருக்கா ஞாபகமிருக்கா...