இங்கேதான்

இங்கேதான்..
எல்லோரும் மன்னர்கள்..
ராஜ்யங்கள் இல்லாவிட்டாலும் கூட!
இங்கேதான்..
மனித முதுகுகளில் கூட
கொண்டை ஊசி வளைவுகள் காண முடியும்!
இங்கேதான்..
நாயகனும் நாயகியும் ஆட..
பின்னணியில் அழுகை மறைத்து ஆடும் குழுக்கள்!
இங்கேதான்..
மக்களுக்காக..மக்களால்..மக்களின்
ஆட்சிகள் நடைபெறுகின்றன..!
இங்கேதான்..
இங்கேதான்..
..
எங்கேயோ வைத்தோம்..
காணவில்லையே..அதை..
..
யாரேனும் பார்த்தீர்களா..
..
கண்டு பிடித்து கொடுப்பவர்களுக்கு ..
.தகுந்த இனாம் ....உண்டு..
விடுதலை..விடுதலை....விடுதலை!