அவனவன் கட்டிலில் அவனவன் கவிஞன்

அவனவன் கட்டிலில் அவனவன் கவிஞன்

எப்போதும் தாளமிட்டுக்
கொண்டிருந்த எனது கைகள்
இப்போது கோலமிட்டுக்
கொண்டிருக்கிறது!
உனது தேகத்தில்.....
"இவன் இசையமைப்பாளன்"


உன்
தேக நிலப்பரப்பில்
நான் வரைந்த
திரவத் தீவுகள்!
அதில் வண்ணங்கள்
காயாமல் வழியுதடி....
உன் உள்ளங்கை
பட்டவுடன் அழியுதடி!
"இவன் ஓவியன்"

நான் இயற்றாத
உன் அறு பக்க உடல் நூலில்,
தவறுகளைத் திருத்த எண்ணி
உதடுகளால் எழுதி வந்தேன்...
முடிவில்
என் மே(ல்)நாவில்
மை இருக்கு.......
ஆனால் பேனாவில்
மை இல்லை....! ஏன்?
"இவன் புத்தக எழுத்தாளன்"


என் கூண்டின்
சிறைக் கைதி
உன் கூட்டில்
ஒழிந்து கொண்டான்..
நான் விரும்பித் தந்த
விடுதலையை மறுத்தும் கூட!
"இவன் காவலன் (போலீஸ்)"


திருட வந்த திருவிடத்தில்
இருபுறமும் கதவிருக்கு.
பின்னாடி ஏறிவந்து
முன்னாடி வியர்த்து விட்டேன்.
இறுதியில் எடுத்துச்
செல்ல முடியாது
கொடுத்துச் சென்றேன்....
"இவன் திருடன்"

திறந்து வைத்த
புத்தகத்தில் தேர்வெழுதும்
திருமகன் நான்.
ஒவ்வொரு முறையும்
அரியர் வைக்கவே
ஆசைப்படுகிறேன்.
அடுத்தமுறை உன்னோடு
அட்டம்ப்ட் எழுதுவற்கு.
"இவன் கல்லூரி இளைஞன்"

அவனவன் கட்டிலில் அவனவன் கவிஞன்
இன்னும் தொடரும்.........

எழுதியவர் : தீனா (9-Sep-15, 11:30 am)
பார்வை : 162

மேலே