தலையணையின் சுகம்

தலையணை என்பதும்
உடனே நினைவுக்கு வருவது
தலையணை மந்திரம்
இது சும்மா மனதை ஈர்ப்பதற்காக
சொல்லும் வார்த்தை அல்ல
தலையணையின் சுகம்
எவராலும் கொடுத்திட இயலாது

நம் மனதை ஒர்நிலைப் படுத்தி
உறக்கம் என்னும் அமைதியை
அள்ளித் தருவது தலையணை
தாய் மடியின் சுகம் அனுபவிக்க
அனைவராலும் ஏற்றுக்கொள்ளப் பட்டது
இந்த மெத்தென்ற தலையணை,
அம்மா மடிமீது ஆழ்ந்த உறக்கம் கொள்ளும்
மழலை தாயின் மடி வேறு, தலையணை வேறு
என வித்தியாசம் இன்றி உறக்கம் கொள்வது
இப் பஞ்சு போன்ற தலையணையே

ஆகா/ தலைவலியால் துடிக்கும் மனிதன்
தலையணையில் தலை சாய்க்கும் போது
தனி சுகமும் அமைதியும் கிடைக்கிறது
தாய் போல் தலையணையும்
தன் மீது தலை சாய்க்கும் அன்புக் குழந்தைகளை
ஆசையுடன் அரவணைத்துக் கொள்ளும்,
அதைக் கட்டி அணைத்தாலும் போதுமே
கிடைக்கின்ற நிம்மதி ஆதரவு எதிலும் இல்லை

காதலர்க்கும் கனிவான இனிமையான
அர்த்தமுள்ள சுகம் கொடுக்க
அவர்களின் ஆனந்தக் கண்ணீர் துடைக்க
ஆதரவுக் கரம் நீட்டுவதும் இத் தலையணையே ,
காதல் கடலில் தத்தளிக்கும் போதெல்லாம்
இத் தலையணையே துடுப்பாகும்,
திருமணம் செய்து கொண்டவர்களுக்கும்
தங்கள் ஆசைகளை அன்புகளை கொடுக்கவும்
தங்கள் மனதில் உள்ள கவலைகள் இரகசியங்கள்
எவரும் அறியாமல் பரிமாறிக் கொள்ளவும் உற்ற துணை
தலையணையை மிஞ்சிட வேறு இல்லை

தலையணை வெறும் பஞ்சு மட்டுமல்ல
நோயாளியைக் குணமாக்கும் வைத்தியருமாகும்,
மழலையின் அழுகைக்கு
அம்மாவின் ஸ்பரிசத்தைக் கொடுக்கும்
உன்னத அன்னையின் ஸ்தானம் இத்தலை அணைக்கு உண்டு
களியாட்டங்களில் சந்தோசம் மிகுதியால்
இளஞர்கள் அடித்து விளையாடும் இனிய பந்து ,
காதலர்களின் கதை கேட்கும் இனிய பதிவு நாடா,
கண்ணீரா/ களியாட்டமா/ அரவணைப்பா/ சுகமா/
எதற்கும் முன்னின்று ஆதரவு கொடுப்பது தலையணையே
தலையணையை மறந்தால் உறக்கம் இல்லை ,
நிம்மதி இல்லை , சுகம் இல்லை

எழுதியவர் : பாத்திமா மலர் (9-Sep-15, 2:27 pm)
Tanglish : thalaiyanai
பார்வை : 95

மேலே