இறைவன் மீது உள்ள காதல்

இறைவன் மீது உள்ள காதல்
உன் உயிராடு
என் உயிர்சேரும்
ஓர் நொடிவேண்டும் .......

நீ சுவாசித்து
விடும் சுவாசத்தை
நான் சுவாசிக்கும்
ஓர் நொடிவேண்டும் .......

நீ பேசும்கீதங்களை
என் செவிகேட்கும்
ஓர் நொடிவேண்டும் .......

உன்னை பற்றியன்னும்
எண்ணங்களில் எந்தன்
ஒவ்வாருநொடியும்
கரைய வேண்டும் .......

எந்தன் கருவிழி
ஒவ்வாரு நொடியும்
உந்தன் பிம்பம்காணவேண்டும் ...

என்றும் உந்தன்
அன்பின் அருள்
எந்தன் இதயத்தின்துடிப்போடு
இருக்க வேண்டும் .......

இறைவா ! உந்தன்
அன்பின்மடியில் துயில்கொள்ளவே
இந்த தாமரை
துயில்கொண்டேன் இன்று .
*********************************************************

எழுதியவர் : மகாலட்சுமி ஸ்ரீமதி (9-Sep-15, 12:19 pm)
பார்வை : 138

மேலே