மரணச்சடங்கு

சுற்றி அமர்ந்த சனக்கூட்டம்
வற்றிய விழியுடன் அம்மா
கலைந்த கேசத்துடன் அன்பானவள்
நனைத்த நேத்திரத்துடன் பலர்
கண்ணீர் அஞ்சலி பதாகை
சுமந்த சுவர்
முதலிரவுக்காய் அலங்கார சோடினைக்காரர் போல சிலர்
மூகாரி இரகம் இசைத்த படி மரக்கொப்பில்
ஒலிக்குழல்
போவது வருவதுமாய் சனங்கள்
என்னைப்பற்றியே வாய்கள் ஆசைபோடுகின்றது
அன்று தான் எனது மரணச்சடங்கு