சுவாசம் மட்டும் இங்கு ஜீவன் அங்கு 555

என்னவளே...
உனக்கு தெரியுமா நாம்
சந்திக்காமல் போகும் நாட்களில்...
அந்த ஒற்றை
சாயங்காலங்கள்...
பலமுறை என்னை
மரண படுத்தி இருக்கிறது...
காய்ந்த இலைகள் மண்ணில்
தினம் விழுவதை போல...
தினமும் உன்
நினைவுகளால் வீழ்கிறேன்...
நாம் சந்திக்கும் நாட்களில்
நீ அதிகமாக கேட்கும் வார்த்தை...
என்னை எப்போதெல்லாம்
நினைப்பாய் என்று...
கோவில் மணி சத்தத்தை
நான் கவனிக்கிறேன்...
இரண்டு மணிசத்ததிற்க்கு
இடைப்பட்ட நேரத்தில்கூட...
உன்னை நான்
மறக்கமாட்டேனடி...
நீ உணர்ந்திருந்தால்
கேட்டிருக்கமாட்டாயடி...
சுவாசம் மட்டும்தான் இங்கு
ஜீவன் உன்னோடுதானடி...
எப்போதும்.....