அதிசயப் பறவை அப்பா
அப்பா அணியும் சட்டையின்
கழுத்துப் பட்டை நைந்து கிழிந்தவை
அப்பாவின் செருப்புகள்
வேகமாக தேய்பவை
அப்பா தரும் மீன்கள்
முட்கள் அற்றவை
அம்மாவின் அடி வயிற்று
பிரசவத் தழும்புகளுக்கு
இணையானவை தான்
அப்பாவின் உள்ளங்கை காய்ப்புகள்
அப்பாவின் சட்டையில் கமழும்
வியர்வை வாசம்
ஒப்பில்லா மகிழ்ச்சி தருவது
அப்பாவின் இதயம்
வானத்தைப் போல விசாலமானது
தன் சிறகுகளை கத்தரித்து
குஞ்சுகளுக்கு பொருத்தும்
அதிசயப் பறவை அப்பா
அப்பாவின் கண்களில் வழியும்
கண்ணீர்த் துளிகள்
அப்பாவின் கன்னம் மட்டுமே அறிந்தது....
__________________________________________
முகநூலில் அன்பழகன் செந்தில்வேல்