இது_கவிதையல்ல
இறுதியாக அந்த சின்னஞ்சிறிய பறவை தன் சிறகுகளை இழந்தபோது எதுவுமே செய்ய இயலவில்லை நம்மால்
இறுதியாக அந்த மரங்கள் வேருடன் பிடுங்கியெறியப்பட்டபோது எதுவுமே செய்ய இயலவில்லை நம்மால்
இறுதியாக அந்த நதி சுரண்டப்பட்டு வற்றியபோது எதுவுமே செய்ய இயலவில்லை நம்மால்
இறுதியாக அந்த விளைநிலங்கள் தரிசாகிப்பின் கட்டிடமானபோது எதுவுமே செய்ய இயலவில்லை நம்மால்
இறுதியாக அந்த ஏழைகள் மரித்தபோது எதுவுமே செய்ய இயலவில்லை நம்மால்
இறுதியாக அந்த இனங்களெல்லாம் அழிக்கப்பட்டபோது எதுவுமே செய்ய இயலவில்லை நம்மால்
இறுதியாக அந்தத் தலைவர்கள் கொலையுண்டபோது எதுவுமே செய்ய இயலவில்லை நம்மால்
இறுதியாக ஊழலில் திளைப்பவரை எதுவுமே செய்ய இயலவில்லை நம்மால்
இப்படித்தான் இறுதிவரை எதுவுமே செய்ய இயலாமல்தான் போகிறது நமக்கு
ஓயாமல் இந்த உலகைப்பற்றிப் பேசிக்கொண்டிருப்பதைத் தவிர