அன்றும் இன்றும்

Windows காற்றோட்டத்திற்கு

மாத்திரம் பயன்பட்ட போது ..

Applications வெறும்

தாள்களில் இருந்தது.


key board வாத்தியக் கருவியாய்


இருக்கும் வரை....


Mouse எலியாக மட்டும் இருந்தது.


file ஆவணமாயிருக்கையில்..


Hard drive அசௌகரிகமான


பிரயாணமாகியது.


cut கத்திக்கு மாத்திரம்


உரிய பணியாகிய போது...


paste என்பது


பசை இன்றிப் பயனற்றது


net என்பது பிடிக்கவும் வடிக்கவும்


மட்டும் பயன்பட்டபோது....


browse மேலோட்டமான


தேடலாக இருந்தது


apple black berry


கனிகளாய்மட்டும் இருக்கும் வரை ...


மீதமான காலம்

கணனிகளான பின்...

போதுமானதாக


இருக்கவில்லை .

எழுதியவர் : உமை (10-Sep-15, 1:18 am)
பார்வை : 521

மேலே