தேடல்

மண்ணுக்குள் பொன்..,
வைத்தேன்.
பெண்ணவளை அடைத்து ..,
வைத்தேன் .
மூடர்களின் எண்ணங்களை ..,
மூளைக்குள்ளே நான் ..,
விதைத்தேன் .
தரணி போற்றும்..,
தாகம் தீர்க்கும் ..,
பெண்ணே ..!
உன்னை அறையில் ..,
இட்டேன் .
மானிட உலகில் ..,
ஆடவனே ..!
என்று கர்வம்..,
கொண்டு வாழ்ந்து ..,
வந்தேன் .
உலகினில் பெண்ணும் ..,
சமமென்று .
உன்னால் இன்று ..,
புரிந்து கொண்டேன் .