தப்பு கணக்கு போட்டுவிட்டேன்

உன் மௌனம்கூட அழகு தான்
வார்த்தைகளால்என் மனதை
காயப்படுத்தாமல் இருப்பதினால்..!

உன்னில் அதிக அக்கறை ....
வைத்துவிட்டேன் -அதனால் ....
எதை சொன்னாலும் கேட்பாய் ...?
தப்பு கணக்கு போட்டுவிட்டேன் ...!!!

கோபத்தில்
என்னை மறந்துவிடு என்று
சொன்னால், ஒரேயடியாகவா ....
மறந்து போவாய்....!!!"

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (10-Sep-15, 9:44 am)
பார்வை : 372

மேலே