கவியும் நானும்_ 2

ஏதோவொரு எண்ணம்
எதையோ காகிதத்தில்
எழுத ஆரம்பித்தேன்...

மனைவி குறுக்கிட்டாள்
மழலைகள் விஷமத்தையும்
மதிய உணவினையும்
மறந்த செயல்களையும்
மறக்காது கூறிக்கொண்டிருக்க...

வந்த கவிதை மூழ்கியது
நிகழ்கால நினைவுகளுக்குள்...!
---------------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (10-Sep-15, 9:49 am)
பார்வை : 393

மேலே