கிராமத்து காதல் கவிதை
அடியே கருவாச்சி
மனசுக்குள் காதல் கருவாச்சி.
உன்ன நெனச்சி தான்
பாதி நரச்சாச்சி.
குயில் போல கூவுறியே
மாமனோட மனசுக்குள்ளே'! .
ரயில் போல போகுறியே
உன்ன நானும் பாக்கையிலே!
சோளக்காட்டு பொம்மையப் போல
சோக்கா நீயும் இருக்கிறீயே! - என்
மாமன் பெத்த மரிக்கொழுந்தே! - இந்த
மாமன் காத்திருக்கேன் உனக்காக.
வெத்தலைய போட்டேன்
செவக்கலயே!
உன்ன கொஞ்சம் பாத்தேன்
செவந்துட்டேன்டி.
மஞ்சள் பூசி மயக்குறியே!
மத்தாப்பாய் நீயும் சிரிக்கிறீயே!
கிளியாச்சும் கொஞ்சி பேசி - நெஞ்சில்
கிலியூட்டி நீயும் போறியே!
கள் குடிக்கத் தேவையில்லையே - உன்
கண்ண கொஞ்சம் பாத்தாலே!
காசு பணம் எனக்கில்லையே - இல்லை
கட்டிடுவேன் தாஜ்மஹாலே.........