உள்ளூர் தேவதைகள் - கற்குவேல் பா
உள்ளூர் தேவதைகள்
``````````````````````````
வெள்ளை கவுன்
கையில் நட்சத்திரம்
பட்டாம்பூச்சி ரெக்கைகள் - என
பழக்கப்பட்ட தேவதைகள் ;
கூந்தலில் குஞ்சம்
இடுப்பில் குடம்
பட்டுத்தாவணி
என பவனிவரும்
எங்கள் கிராமத்துப்
பெண்களைப் பார்த்து - கொஞ்சம்
கிறங்கித்தான் போகிறார்கள் !