தமிழனாய் பிறப்பது அதனினும் அரிது

நாம் "தமிழ்" என்று சரியாக உச்சரித்தாலே.. நம் நாக்கு மடங்கி.. அமிர்தவாயிலான இரண்டு துவாரங்களுக்கு உங்களை எடுத்துச் செல்லும்... இங்கிருந்து தான் அமிழ்தம் இறங்கும்...

எத்தகைய.. மேன்மையான மொழியாக.. நம் சித்தர்கள் இதனை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்...

அ + உ + ம் = ஓம்

இதனை.. தனித்தனியாக உச்சரித்துப்பாருங்கள்...
"அ" என்னும் அகாரம் அடிவயிற்றிலிருந்து.. ஒலிக்கும்...
"உ" என்னும் உகாரம் நெஞ்சுக்குழியிலிருந்து.. ஒலிக்கும்..
"ம்" என்னும் மகாரம் தொண்டையிலிருந்து ஒலிக்கும்...

இம்மூன்றையும் சேர்த்து ஒன்றாக உச்சரிக்கும்போது... நம் உடலில் மூலாதாரம் தொடங்கி... ஆக்கினை வரையிலான ஆறு ஆதாரங்களும்... (சக்கரங்கள்) சீரடையும்... இத்தகு.. தன்மையுடைய ஓங்காரத்தை நாம் இயல்பாக பயன்படுத்தும் பன்மைச் சொற்களில் காணலாம்...

உதாரணமாக...

வருவோம் = வரு + ஓம்
செல்வோம் = செல் + ஓம்
வெல்வோம் = வேல் + ஓம்

etc.. etc...

எனவே நம் தாய்மொழியாகிய தமிழை சரியாக உச்சரித்து.. பேசினால்.. அதுவே பெரிய யோகப்பயிற்சியாகும்... ஆகையால் தமிழில் பேசவும், எழுதவும்.. தயக்கம் கொள்ளாதீர்கள்...

மனிதனாய் பிறப்பது... அரிது என்றால்...
தமிழனாய் பிறப்பது... அதனினும் அரிது!!!
______________________________

எழுதியவர் : செல்வமணி (11-Sep-15, 9:35 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 479

மேலே