ஏன் இப்படி
குளிரூட்டி அரங்குக்காக "கோட்" ஆடையா?
"கோட்" ஆடைக்காக குளிரூட்டி அரங்கா?
உன் வறட்டு கௌரவத்தை
கோட்டிலா மாட்டி வைத்திருக்கிறாய்?
வெயில் வாட்டி வதைக்கும் நாடல்லவா?
கோயில் குளத்துக்கும் கோட்டுத் தேவையா?
தட்பவெப்பத்திற்கு ஏற்ப ஆடையமைய வேண்டாமா?
குட்டிக் குழந்தைக்கும் போட்டு விடலாமா?
உன் ஆடைக் கலாச்சாரத்தில் ஆழ்ந்த
ஆன்மீகமும் அறிவியலும் உள்ளதை அறியாயோ?
மானத்தைக் காத்திடும் ஆடை போதும்
உன் செருக்கைக் காட்டிட மற்றவருக்கு உதவிடு அது போதும்...!!!