தூரத்தில் என் கனவு

தனிமையில் உதிரும் பூங்கனவுகளில்
இதழ்களின் இதழ்கள்
சுவைக்கச்சொல்லி மன்றாடியது.!

காத்திருந்த தருணம் யாவும்..
உன் காலடிச்சப்தம் இன்றி
வெறுமையே சொட்டிக்கொண்டிருக்க

என் ஏக்கப்பெருமூச்சுகள்
கேசம் உலர்த்தும் காற்றாய்..
வேடம் மாறி..
உன் கழுத்து தடவி கடந்துபோனது.!

நினைவுகளை
விரட்டாமல் மேயட்டும் என..
விட்டிருந்தேன்
என் பருவ கால விளைநிலங்கள் மீது.!

மீறிய நிலையில்
இப்படி ஒரு கவிதையில் காமம் உதிர்த்து
உறங்கிவிடுவதும்..
உண்டு.!

எழுதியவர் : வசந்த நிலா (13-Sep-15, 7:57 am)
பார்வை : 480

மேலே