என் பாடசாலை கீதம்
ஒருதனி முதலவனருள் நனி ஓங்க
ஓதுநல் மாணவர் ஓங்க
கல்முனைப் பதினியில் வாய்ந்திடும் -ஸாஹிறா
கற்றிடும் மாணவர் நாமே
ஆய்ந்த கலையுணர்ந் தவனியில் மிளிர
அல்லாஹ்வைத் துணை கொள்ளுவோமே
மாண்புறு மாணவர் நாமே – இம்
மதிமிகப் படைத்தவர் நாமே
சேர்ந்து பயின்றிடுவோமே
ஜெயமே.... ஜெயமே.... ஜெயமே.... (ஒருதனி)
உடலுளம் உயிர்வளம் உறுகலை தெரிவோம்
உயர்ந்தவரெனச் சிறந்திடுவோம்
திடமனமுடையவராய்த் திகழ்திடுவோம்
தேசத்தியாகிகளாவோம்
வழங்கிய வாய்மை காப்போமே - இம்
மாசகற் பணிபுரிவோமே
நாளுமிகை கடனாமே
ஜெயமே.... ஜெயமே.... ஜெயமே.... (ஒருதனி)
நல்லவரோடுறவாடி நடப்போம்
நண்பர் விரும்மவிருப்போம்
எல்லவரும் மிகயின்புறவே யென்
றெண்ணி வியன்றிடுவோமே
மானிடர் யாவரும் சமமே - இம்
மானில மீதினில் நிஜமே
அல்லாஹ்வினுரையிதுவாமே
ஜெயமே.... ஜெயமே.... ஜெயமே.... (ஒருதனி)