கஜல் 18

என்னை நான் வடித்துக் கொள்கிறேன் உன்னிடம் அளிக்க
மூச்சை வாங்குகின்றேன் நாளெலாம் காதலை மதிக்க

பேரானந்தமே நேராக என்னோடு கை குலுக்க
பூரிப்போடு வாழப் போகிறேன் இன்னலை அழிக்க

எப்பொழுதும் பகைமை என்பதே எங்கு மின்றிப் போக
நான் நட்பென்பதையே காணுவே என் கனாப் பலிக்க

என்னுள்ளே இனிக்கும் நற்சுவை வந்ததே சுரந்து
உன் சிந்தை மனத்தில் நின்றிடா கானமாய் ஒலிக்க

உன்னைக் காதலிக்கும் என்னிலே பொங்குதே மகிழ்ச்சி
நாளை என்பதே பொன்னாகுமே கண்களே விழிக்க

துயரெல்லாம் இருள் ஆகும் அதைப் போக்க வா விரைந்து
ஒளியாய் நீ இருப்பாய் என்னுடன் என்றுமே ஜொலிக்க

தான் எந்நேரமும் முன்னேர நல் சிந்தனை அணிந்து
ரோச்சிஷ்மான் உன்னைத்தான் நாடுவான் தோல்வியை ஒழிக்க

எழுதியவர் : ரோச்சிஷ்மான் (14-Sep-15, 5:31 pm)
சேர்த்தது : ரோச்சிஷ்மான்
பார்வை : 93

மேலே