என் இரவின் காதல்
யாருமில்லாத என் இரவு வேளையில்
பூவும் உறங்கும் வேளையில்
என் நிஜங்களுக்கு காரணமாக
இருக்கும் என் மதியே ....
நான் உன்னுடன்
நிஜமாக வாழாமல்
உன் நிலவின் நிழலில்
என் கனவில்
உந்தன் கானல் நீரில்
வாழ்கிறேன் .......
என்றும் உந்தன்
நிலவின் நிழலை
மட்டுமே தொடுகிறேன் ...
உந்தன் நிஜத்தின்
நிழலை தொடுவதற்காக
என் உகிர்
காத்து கொண்டு இருக்கிறது .....

