என் நிலவின்மேல் காதல்

அனைவரும் அமைதியாக
உறங்கும் வேளையில்
நான் மட்டும்
உறங்காமல் விழித்து
கொண்டு இருக்கிறேன் ....

நிலவில் உந்தன்
பிம்பத்தை காண

இயற்கையாக
இரவும் நீண்ட நேரம்
நீடிக்காது.....

ஏனெனில்
இரவு பகல் மீது
காதல் கொண்டு உள்ளது ...

எந்தன் இரவும்
நீண்ட நேரம்
நீடிக்கிறது ....

ஏனெனில்
நீ என் மேல்
காதல் கொள்ளததால்

விரைவில் என் மேல்
காதல் கொள் தோழியே

என் இரவும் பகலுடன்
காதல் செய்ய ஆசைப்படுகிறது ....

விரைவில் என் மேல்
காதல் கொள்ளடி .....

இல்லையெனில்
உறங்காமல் இருக்கும்
என் இரவுகள்
ஓரடியாக
என்னை உறங்க வைத்திடும் ......

எழுதியவர் : மகாலட்சுமி ஸ்ரீமதி (14-Sep-15, 4:51 pm)
Tanglish : en nilavin kaadhal
பார்வை : 113

மேலே