அவனின்றி-ஆனந்தி

எனக்கு
எழுதவே வராது
என்றானது - என்
நிலை.....

என் எழுதுகோலுக்கு
மை தீர்ந்ததா

என் கற்பனை
சிறகு முறிந்ததா

என் காகிதத்திற்கு
கால் முளைத்ததா

சொல் நீயே
சொல்
அதிகரித்துவரும் - உன்
நினைவுகளினால் தானே

நேசிக்கிறேன்
என்று நீ
சொன்ன ஒற்றை
வார்த்தையின் பொருள்
அறியாது
இன்றும் கூட
தேடிக்கொண்டிருக்கிறேன்
அகராதிகளில்....

என் காலங்கள் முழுக்க
காயங்களாகவே
மாறிவிடுமோ....

என் வானில் மட்டும்
விடியல்கள் இல்லாமலே
போய்விடுமோ....

என் கண்ணீர் மட்டும்
தொலையாமல் இறுதிவரை
இருந்திடுமோ....

காத்திருத்தலில் எது
எல்லை சொல்
கல்லறையா....

....

எழுதியவர் : ஆனந்தி. ரா (14-Sep-15, 8:26 pm)
பார்வை : 262

மேலே