கோபத்திலும் அழகு இருக்கு

என்னவனில் ....
தவறில்லை எனக்கு ...
நன்றாக புரிகிறது .....
என்றாலும் ஊடலில் ....
சின்ன சண்டையும் அழகு ....!!!

என்
மீது உள்ள கோபத்தில் ....
என் மெல்லிய தோளை....
தொடாமல் இருக்கும் ...
என்னவனில் கோபத்திலும் ....
ஒரு அழகு இருக்கத்தான் ..
செய்கிறது

+
குறள் 1325
+
ஊடலுவகை
+
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 245

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (15-Sep-15, 9:53 am)
பார்வை : 121

மேலே