இன்னும் ஓயாத சாதி வெறி - உதயா

தென்னை மரத்தின்
ஒவ்வொரு கீற்றிலும்
பலவகை பறவைகள்
இன்னும் சற்று நேரத்தில்
வெயிலில் உலர்த்தபடவுள்ள
ஏதோ ஒரு தானியத்திற்காக
அவர் அவர்களுக்கு
உரித்தான மொழிதனில்
எதையோ வினவியவாறே காத்திருக்க
சாதி இல்லையடி பாப்பா
என்று பாடிய பாரதி முதல்
இன்றுவரை பல மேடைகளில்
சாதி அழிந்ததாகவும்
ஒழிந்ததாகவும்
பேசிக்கொண்டிருந்த
அரசியல் வாதிகளின்
கூற்றினை உண்மை என்றே
நம்பிக்கொண்டிருந்த
முனியப்பனுக்கும்
அன்வருக்கும்
ஜோசப்புக்கும்
இன்னும்
விளங்கவேயில்லை
அரசாங்கம் நடத்தும்
ஒவ்வொரு வேலைவாய்ப்பு
தேர்வுகளிலும்
அரசாங்கம் சாதி வெறியினை
மறைமுகமாக
தூண்டிக்கொண்டிருப்பது