ஒரு வார்த்தை மொழியாலே
உம்..
என்ற உனது
ஒரு வார்த்தையில்
உறவு இறுகி..
பல்கிப் பெருகி..
இதயத்தை கிழித்து
ஊடுருவி ..
வட்டச் சம்மணம் போட்டு
அமர்ந்து கொண்டு
அமைதியான ஓடையின்
தெளிவோடும் ஈரத்தோடும்
நெடுங்காலமாய்
என்னுள்ளே அரசாட்சி செய்து வருவது ..
எனக்கு மட்டும்தானே தெரியும்!
ஒரு வார்த்தை மொழியாலே
எனை உருக வைத்தாய் என்ற
பாடல் எங்கோ ஒலிக்கிறது..
என்னை கவனிக்காமல் ..
பேருந்தில் இருந்தும் இறங்கும் நீ
பல ஆண்டுகள் கழித்து உன்னை பார்த்த நான்..
இந்த பூமியின் சுழற்சியில் ..
அருகருகே !