நானும் என் காதலும் -வயசு 15----------------2

முதல் தோல்வி
முதல் அனுபவம்
முகத்தில் அரும்புகள் தழைக்க
வகுப்பறைகள் கல்லறைகளாக
அடியெடுத்து வைத்தேன் பத்தாம் வகுப்பில்
பொம்மையெ தொலைத்த குழந்தை போல்
என் வாழ்க்கை
காலாண்டைக் கடந்தது ………

ஒன்பதாம் வகுப்பில் தொலைத்த முத்துவை
தொலைத்த இடத்திலே தேடினேன்
ஒரு படி மேலே
பத்தாம் வகுப்பில்
நானாக அல்ல தானாகா

அன்று தான்………………!
வானத்தை காகிதமாக்கி
என்னவளுக்கு எழுதிய முதல் கவிதை
“சிலந்தி வலையில் மாட்டிய
தட்டானாக தவித்தேன் பெண்ணே
இறக்கை இருப்பதை மறந்து
உன் இதய வலையில்”

விடுதியில் தங்கினாலும்- உன்
வீட்டு வாசலையே என் காலரியும்
பல் துலக்கும் முன்பே
பத்து முறை வாய் கொப்பளிக்கிறேன் - நாளை
நீ கொடுக்கும் ஒற்றை முத்தம்
என் தேகம் நனைக்குமா என்று!

படிக்க புத்தகம் விரித்ததில்லை
பல்லாங்குழி கண்களை காணாமல் இருந்ததில்லை
உன் நெற்றியில் விழும் ஒற்றை முடியில் தொங்கும் வியர்வை துளிகளில்
நானும் சேர்ந்தே பயனிக்கிறேன்
உன் உதட்டு அலைக்கற்றையில்

முழுத் தேர்வில் கவனம்
உனக்கு பாடத்தில்
எனக்கு உன் பார்வையில்

தேர்வு முடிந்த தருணம்
விடா முயற்ச்சியில்
நீ- முன்னேறி விட்டாய்
நல்ல வேளை……………
எந்த புன்னியவானோ தெரியவில்லை
கணக்கில் 36 மதிப்பெண் போட்டு என்னையும் தேற்றிவிட்டார்

முடிவுகள் இனிதே கழிந்தது

நீ உன் வீடு தேடி………………………
நான் என் வீடு தேடி…………………..
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மடந்தை ஜெபக்குமார்

எழுதியவர் : மடந்தை- ஜெபக்குமார் (16-Sep-15, 9:59 am)
பார்வை : 122

மேலே