ஹம்பி சலோ

அலுவல் வேலை ..
ஹாஸ்பெட் நகரத்து
மல்லிகை விடுதியில்
பத்து நாள் வாசம்..
வரலாற்றின் நினைவேடுகளாய்
இடிபாடுகளும் இன்னும் இருப்பவைகளுமாய்
ஹம்பி நகரம்..இங்கிருந்து கொஞ்ச தூரம்
என்ற விடுதியின் காப்பாளர்
அனுப்பி வைத்தார் என்னை
ஒரு நாள் சுற்றுலாவாய்..அங்கே..
இளம் பெண்ணொருத்தி..
பேருந்தில் எனது பக்கத்தில்..
நவீன உடையோடும்..
திரண்ட அழகோடும்..
நாற்பதுகளின் துவக்கத்தில் நான்
இருபதுகளின் எல்லையில் அவள்..
எங்கள் இருவருக்கும் இடையில்
இடைவெளி ஒரு நூலிழை ..
வெளியில் பார்க்கும் எதுவும்
சூடாகவே தோன்றியது..
சே..
என்ன இது..
என்று நான்.. சங்கடத்தில் ..
ஒரு மணி நேரமாக..
திடீரென..
"அங்க்கிள் ..ஹம்பி..
அருமையான இடம் தெரியுமா.."
என்றாள் குழந்தையாக..
அந்த நொடி முதல்
மாலை திரும்பும் வரை
மகளாகவே தோன்றினாள்
எனக்கு அவள்!
ஹம்பி சலோ!