இடைவெளி

தொடங்கப்பட்ட இடம் இருட்டறை ....
இரவும் பகலும் ஒரு அறை ....
வெளிச்சம் என்பது இல்லாத அறை...
எவரும் அச்சமில்லாமல் வாழ்ந்த அறை....
வீரத்தை சொல்லி தந்த அறை ..
விவேகத்தை கற்று தந்த அறை..
அன்பை எடுத்து சொன்ன அறை...
அறிவை வளர்த்து விட்ட அறை..
புன்னகையில் வாழ்ந்த அறை..
புனிதனும் பிறந்த அறை...
பூமியை ஆண்டவனும் அடைந்திருந்த அறை...
ஆண்டவனும் பூமியை அடைய காத்திருந்த அறை..
ஆளப்போவனும் வந்தடையும் அறை ..

வாழ்க்கை முடியும் வரை திரும்பி செல்ல முடியாத அறை...

தாயின் கருவறை...

இன்று மறந்து போகும் அறை.....
இடைவெளி வந்துவிட்ட அறை....
இருந்தவனுக்கும் இறக்கமாய் பார்த்துக்கொண்டவளுக்கும் ..... இடைவெளி....

எழுதியவர் : சாமுவேல் (16-Sep-15, 3:55 pm)
Tanglish : idaiveli
பார்வை : 67

மேலே