பூப் பூவாய் பூத்திருக்கு இறைவனின் அன்பளிப்பு

பூப் பூவாய் பூத்திருக்கு...!
இறைவனின் அன்பளிப்பு.!!

கண்ணே கமலப்பூ
கண்மணியே ஏலப்பூ
கண்ணிரண்டும் குவளைப்பூ
காதிரண்டும் வெள்ளரிப்பூ!

மூக்கு முல்லைப்பூ
மேற் புருவம் சண்பகப்பூ
மேனி மகிழம் பூ
முகமோ தாமரைப்பூ !

பார்வை காந்த(ல்)ப்பூ
புன்னகை மயக்கும்பூ
உதடுகள் தித்திப்பூ
உள்ளமோ மத்தாப்பூ !

பூப் பூவாய் பூத்திருக்கு...!
இறைவனின் அன்பளிப்பு.!!

எழுதியவர் : கிருஷ்ண சதானந்த விவேகானந (16-Sep-15, 3:55 pm)
பார்வை : 111

மேலே